சாலையில் உறங்கி கொண்டிருந்த முதியவரை உயிருடன் எரித்த இளைஞர்கள்: அதிர்ச்சி வீடியோ!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சாலையின் ஓரமாக உறங்கி கொண்டிருந்த முதியவரை இளைஞர்கள் சிலர் எரித்து கொலைக்கு முற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் சாலையில் உறங்கி கொண்டிருக்கும் முதியவருக்கு இளைஞர்கள் சிலர் தீ வைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வளைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த முதியவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து போலீஸார் 4 பேரை கைது செய்துள்ளனர். அந்த முதியவரின் பெயர் ஜாப்பர் என தெரிகிறது. அவர் குடிபோதையில் இளைஞர் ஒருவரின் தாயை திட்டியதால் அந்த இளைஞர் தனது சக நண்பர்களோடு இவ்வாறு செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.