முதல்வரின் முடிவுக்கே விட தமிழரசுக் கட்சி தீர்மானம்

வடக்கு மாகாண அமைச்சர் கள் மீதான விசாரணை அறிக்கையின் தொடர் நடவடிக்கை குறித்து முதலமைச்சரின் முடிவுக்கு கட்டுப்படுவதென தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை சமர்ப்பிதற்கான விசேட அமர்வு நேற்றையதினம் கைதடி யில் கூடியது. இதற்கு முன்னதாக நேற்றுக் காலை பத்துமணியளவில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தலைமையில் நடைபெற்றதோடு, தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

எனி னும் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. குறித்த சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிய வருகையில், 

வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை தற்போது வெளிவந்துள்ள நிலையில்,

அதில் இரண்டு அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டவர்களாக கூறப்பட்டுள்ளது. 

அவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்து புதிய அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டுமென ரெலோ தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. 

எனினும் புளொட், தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியன தமது கட்சி நிலைப்பாடுகளை தெரிவிக்காத நிலையில், நேற்றைய தினம் தமிழரசுக் கட்சி கூடி ஆராய்ந்துள்ளது. 

அதில் குறித்த விடயம் தொடர் பில் தலையிடுவது இல்லை எனவும், முதலமைச்சர் மேற்கொள்ளும் தீர்மானமே இறுதி தீர்மானம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலைப் பாட்டை நேற்றைய மாகாண சபை அமர்விலும் முதலமைச்சரே தற்துணிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பந்தை முதலமைச்சர் பக்கம் திருப்பி விட்டு அவரை நெருக் கடியான சூழலுக்குள் தள்ளிவிட சிலர் முயல்வதாக உறுப் பினர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள் ளமையும் குறிப்பிடத்தக்கது.