பரதநாட்டியக் கலைஞராக நடிக்கும் லட்சுமி மேனன்

பிரபுதேவா ஜோடியாக நடிக்கும் படத்தில், பரதநாட்டியக் கலைஞராக நடிக்கிறார் லட்சுமி மேனன்.

அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் ‘யங் மங் சங்’. குங்ஃபூ பயிற்சியாளராக பிரபுதேவா நடிக்கும் இந்தப் படம், காமெடி எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. பிரபுதேவா தந்தையாக இயக்குநர் தங்கர்பச்சான் நடிக்கிறார். மேலும்,  ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், சித்ரா லட்சுமணன், முனீஸ்காந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில், பிரபுதேவா ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். படத்தில், பரதநாட்டியக் கலைஞராக நடிக்கிறார் லட்சுமி  மேனன். உண்மையிலேயே பரதநாட்டியக் கலைஞரான லட்சுமி மேனன், 7 வருடங்களாக பரதநாட்டியம் கற்று வருகிறாராம்.  அதனால் தான், இந்தப் படத்துக்கு அவரைத் தேர்வு செய்தார்களாம்.