மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் 'தளபதி 2?

ரஜினி, கமல், தனுஷ், சிம்பு, உள்பட பல முன்னணி நடிகர்கள் தற்போது இரண்டு பாக படங்களில் நடித்து வருவதால் கோலிவுட்டில் தற்போது இரண்டாம் பாக டிரெண்ட் பரவி வருகிறது. இந்த வகையில் இந்த இரண்டாம் பாக பட்டியலில் தற்போது மணிரத்னம் அவர்களும் இணையவுள்ளார்.

இதுவரை மணிரத்னம் தனது படங்களில் இரண்டாம் பாகம் குறித்து நினைத்து கூட பார்க்காத நிலையில், 'காற்று வெளியிடை' தோல்வி அவரை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டதாம்

ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த 'தளபதி' படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்க ரஜினி மற்றும் மம்முட்டி ஆகிய இருவரிடமும் அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.