'பாகுபலி 2' படத்துடன் கனெக்சன் ஆனது 'சச்சின்' திரைப்படம்

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்' திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தை போலவே இந்த படத்தையும் சூப்பர் ஹிட் ஆக்க வேண்டும் என்று படக்குழுவினர் இரவுபகலாக புரமோஷன் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழ் டப்பிங் படத்திற்கு மூன்று பாடல்களை மதன்கார்க்கி எழுதியுள்ளார். இவர்தான் 'பாகுபலி 2' படத்திற்கு பாடல்களையும் தமிழ் வசனங்களையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் படத்திற்கு பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுத்த இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்கார்க்கி தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

 '200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் தெண்டுல்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.