விஜய்யின் மேஜிக்கை கையில் எடுக்கும் ஜெயம்ரவி

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்த படத்தில் மூன்று கேரக்டர்களில் ஒரு கேரக்டராக மேஜிக்மேன் கேரக்டரில் விஜய் நடித்து வருகிறார் என்பதை சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம்

இந்த நிலையில் விஜய்யை அடுத்து ஜெயம் ரவியும் தன்னுடைய அடுத்த படத்தில் மேஜிக்மேனாக நடித்து வருகிறாராம். 'மிருதன்' இயக்குனர் சக்தி செளந்திராஜன் இயக்கத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் 'டிக் டிக் டிக்' திரைப்படத்தில் ஜெயம்ரவியின் கேரக்டர் மேஜிக்மேன் தானாம்

பெரிய நடிகர்கள் யாரும் இப்போதைக்கு மேஜிக்மேன் கேரக்டரில் நடிக்காத நிலையில் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்கள் இந்த கேரக்டர்களை கையில் எடுத்துள்ளதால், இனிவரும் காலத்தில் மேஜிக்மேன் கேரக்டர் கோலிவுட்டின் டிரெண்ட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் டிக் டிக் டிக் படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.