அதிரடி ஆக்சனில் இறங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டத்திற்கு தகுந்தவாறு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடம் மட்டுமின்றி ஆக்சன் களத்திலும் இறங்கும் வகையான கதையையே தேர்வு செய்கிறார். சமீபத்தில் வெளியான 'டோரா' திரைப்படம் இதை உறுதி செய்த நிலையில் தற்போது முழுக்க முழுக்க ஆக்சன் களத்தில் இறங்கியுள்ளார் நயன்தாரா

இந்த தகவலை இன்று வெளியாகியுள்ள 'இமைக்கா நொடிகள்' டீசர் உறுதி செய்துள்ளது. விஜயசாந்தி டைப்பில் துப்பாக்கியுடன் ஆக்சன் களத்தில் இறங்கியுள்ள நயன்தாராவுக்கு இந்த படம் பெரிய பிரேக் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியான டீசருக்கு கிடைத்து வரும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா, அனுராக் காஷ்யப் ஆகியோர்களின் மிரட்டலான நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றூம் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.