யாழ் வாள்வெட்டு ரவுடிகளிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

யாழ்ப்­பாணம் மடத்­தடி பகு­தியில் இடம்­பெற்ற வாள்­வெட்டு சம்­ப­வ­மொன்றில் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட எட்டுப் பேரில் மூவ­ருக்கு மூன்­றாண்டு கடூ­ழிய சிறைத் தண்டனையும், ஏனைய ஐவ­ருக்கு ஓராண்டு கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் விதித்து யாழ்.நீதிவான் நீதி­மன்ற நீதிவான் எஸ்.சதீஸ்­கரன் உத்­த­ர­விட்­டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்­பாணம் மடத்­தடி பகு­தியில் வாள்­வெட்டு சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றி­ருந்­தது. இச் சம்­ப­வத்தில் ஒருவர் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்தார். இந்­நி­லையில் இச் சம்­பவம் தொடர்­பாக மாண­வர்கள் இருவர் உட்­பட எட்டுப் பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக யாழ்.நீதிவான் நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணை­யா­னது தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வந்­தி­ருந்­தது. இவ் வழக்கு விசா­ர­னையில் எட்டு பேரும் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கடந்த வழக்கு தவ­னையின் போது வழக்கின் தீர்ப்­புக்­காக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் குறித்த வழக்­கா­னது நேற்­றைய தினம் தீர்ப்­புக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது குறித்த வாள்­வெட்டுச் சம்­ப­வத்தில் ஈடு­பட்ட எட்டு பேரில் 1ஆம் 2ஆம் 8ஆம் எதி­ரி­க­ளுக்கு மூன்­றாண்டு கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும், ஏனைய ஜந்து எதி­ரி­க­ளுக்கும் ஒராண்டு கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் விதித்­த­துடன் எட்டுப் பேருக்கும் ஒவ்வொருவரும் தலா 50ஆயிரம் ரூபா இழப்பீடு செலுத்தவும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.