யாழில் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

யாழ். மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட குருநகர் பொது சுகாதாரப்பரிசோதகர் பிரிவில் வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, நாளை 17 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை குறித்த தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளது.

இதேவேளை, தடுப்பூசிகள் ஏற்றப்படும் இடங்கள் மற்றும் நேர விபரங்கள் யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளன.

17-05-2017 புதன்கிழமை

காலை- 09 மணி முதல் முற்பகல்-11 மணி வரை- யாழ். சென் ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலை முன்பாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

முற்பகல்-11 மணி முதல் முற்பகல்-01 மணி வரை- 4 ஆம், 5 ஆம் குறுக்குத் தெருக்களிலும் பிற்பகல்-02.30 மணி முதல் 05.30 மணி வரை- சிப்பித்தரை வீதியிலும் தடுப்பூசி ஏற்றப்படும்.

18-05-2017- வியாழக்கிழமை

முற்பகல்- 09 மணி முதல்11 மணி வரை- குருநகர் மூன்றாம் குறுக்குத் தெருவிலும், முற்பகல்- 11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை குருநகர் இரண்டாம் குறுக்குத்தெருவிலும் தடுப்பூசி ஏற்றப்படும்.

பிற்பகல்-02.30 மணி முதல் 04 மணி வரை- ஐஸ்பிளான்ட் வீதியில் தடுப்பூசி ஏற்றப்படும்.

19-05-2017- வெள்ளிக்கிழமை

முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை- குருநகர் சனசமூக நிலையம் முன்பாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

முற்பகல் 11 மணி முதல்- பிற்பகல்-01 மணி வரை நான்காம் குறுக்குத் தெருச்சந்திக்கும் பிற்பகல்- 02.30 மணி முதல் 04 மணி வரை பாங்சால் வீதி, மூன்றாம் குறுக்குத்தெருச் சந்திக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெறும்.

22-05-2017- திங்கட்கிழமை

காலை -09 மணி முதல் 11 மணி வரை குருநகர் யாகப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெறும்.

முற்பகல்-11 மணி முதல் 01 மணி வரை - புதுமை மாதா ஆலயத்திற்கு முன்பாகவும் பிற்பகல்-02.30 மணி முதல் 04 மணி வரை ஓடக்கரை வீதியிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெறும்.

24-05-2017- செவ்வாய்க்கிழமை

முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை- கொண்டடி வீதிச் சந்தியிலும் முற்பகல்-11 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை- அடம்பன் வீதிச் சந்தியிலும் இடம்பெறும்.

பிற்பகல்-02.30 மணி முதல் 04 மணி வரை யூபிலி மகப்பேற்று நிலையம் முன்பாக தடுப்பூசி ஏற்றப்படும்.

25-05-2017- புதன்கிழமை

முற்பகல் 09 மணி முதல் 11 மணி வரை- குருநகர் சின்ன ஆஸ்பத்திரி முன்பாக தடுப்பூசி ஏற்றப்படும்.

முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை செபஸ்ரியார் கோவில் அருகாமையிலும் பிற்பகல்-02.30 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை மவுண் கார்மல் வீதியிலும் இடம்பெறும்.

26- 05- 2017- வியாழக்கிழமை

முற்பகல்-09 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை நடமாடும் சேவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடங்களில் குறிக்கப்பட்ட நேரங்களில் பொதுமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களை அழைத்து வந்து விலங்கு விசர் நோய்த் தடுப்பூசியைத் தவறாது ஏற்றி செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.