யாழ் றியோ ஐஸ்கிறீம் முதலாளி உட்பட பிரபலமானவர்களைக் குறி வைத்து இணையத்தளத்தில் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமானவர்களைக் குறி வைத்து இணையத்தளம் ஒன்றில் தரக்குறைாகச் செய்திகள் போட்டு பணம் பறிக்கும் நோர்வே நாட்டில் வசிக்கும் ஒருவன் செய்யும் வேலைகளால் குடாநாட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முகப்புத்தகத்தில் போடும் புகைப்படங்களை தனது பக்கத்தில் போட்டு அவர்களைக் கேவலப்படுத்தி அவர்களில் யாராவது தன்னுடன் தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயற்பாட்டை அவன் செய்து கொண்டுள்ளான். இங்கு நாம் காட்டியுள்ளது றியோ கிறீம்கவுஸ் முதலாளி பற்றிய சற்றிங்காகும். தன்னுடன் நெருக்கமாக உள்ள பெண் ஒருவரை வைத்து கதைக்க வைத்து அவர் கதைப்பதில் முக்கிய சொற்களை பகுதி பகுதியாக பிரித்து தனக்கு தேவையான வார்த்தைகளாக உருவாக்கி இணையத்தளத்தில் போட்டு அவர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளான்.

யாழ்ப்பாணத்தில் பணக்காரர்கள், முக்கியஸ்தர்கள் போன்றவர்களே இவனின் முக்கிய குறியாகும். இவனது செயற்பாட்டை தட்டிக் கேட்க முற்படும் ஊடகவியலாளர்களையும் குடும்பமாக பிரசுரித்து கேவலப்படுதுவதுடன் அவர்களை பல சிக்கல்களில் மாட்டுவதற்கும் முற்பட்டுள்ளான். யாழ் மக்களுக்கு பிரபலமான எமது இணையத்தளத்தின் பெயரில் இன்னொரு இணையத்தளத்தை பதிவு செய்து இவ்வாறான கேவலமான செயற்பாடுகளை அவன் மேற்கொள்கின்றான். ஆகவே இது தொடர்பாக பொதுமக்கள் விளிப்புடன் இருக்குமாறு நாம் கேட்டு் கொள்கின்றோம்.

செய்தி ஆசிரியர்

வல்லிபுரத்தான்

newsvallipuram@gmail.com