சண்டிலிப்பாயில் மகனை வெளிநாடு அனுப்பியதால்கடன்தொல்லையால் உயிரிழந்த தந்தை

குடும்­பத் தலை­வர் ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

கடன்­பட்டு வெளி­நாடு சென்ற தனது மகன் திருப்பி அனுப்­பப்­பட்­ட­தால் கட­னைத் திருப்­பிச் செலுத்த முடி­யாத நிலை­யில் குறித்த தந்­தை­யார் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வத்­தில் சண்­டி­லிப்­பாய் மாசி­யப்­பிட்­டி­யைச் சேர்ந்த முரு­கேசு தம்­பி­ராசா (வய­துய- 58) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

கட­னைத் திரும்­பச் செலுத்த முடி­ய­வில் லையே என்று கவ­லைப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த குறித்த குடும்­பத் தலை­வர் நேற்­று­முன்­தி­னம் தவ­றான முடிவு எடுத்து நஞ்­ச­ருந்­தி­யுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் அவ­ருக்கு மேல­திக சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­போ­தும் சிகிச்சை ப­ய­ன­ளிக்­காது அவர் நேற்­றுக் காலை உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டது. இவர் 4 பிள்­ளை­க­ளின் தந்தை.

பொலி­ஸார் மற்­றும் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். உட­லம் குடும்­பத்­தி­ன­ரி­டம் நேற்று ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.