மது போதையில் மாமியாருக்கு மாறிக் குத்திய மருமகன்! யாழ் ஊர்காவற்துறையில் சம்பவம்

தனது மனைவியையும் மாமியாரையும் தாக்கிய நபரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன், நேற்று (12) உத்தரவிட்டார்.

ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு, மதுபோதையில் வந்த நபர் தனக்கு உணவு பரிமாறாத மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோரை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்ட அவர், ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

மனைவியை தாக்கியமை மற்றும் மனைவியின் தாயாரை தாக்கியமை ஆகிய இரு வழக்குகள் குறித்த நபருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, மனைவி குறித்த நபரை மன்னிப்பதாகவும் அவருடன் சமாதானமாக செல்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து 50 ஆயிரம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார்.

எனினும், மனைவியின் தாயாரைத் தாக்கியமைக்காக எதிர்வரும் 26ஆம் திகதிவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணையின்போது,  நான் தாக்கியது மனைவியின் தாயார் என தெரியாது எனவும் மதுபோதையில் தாக்கிவிட்டேன் எனவும் சந்தேக நபர் தெரிவித்தார்.