வேட்டியை இளக்கிவிட்டு பாய்ந்தேன் அன்னத்தின் மீது!! யாழ் கோவிலுக்குள் நடந்தது என்ன?

"போய்ஸ்" படத்தில செந்தில் ஒரு "டேட்டா பேஸ்" வைச்சு "மெயின்டேன்" பண்ணுவார்.... அதாவது எந்த எந்த கோயிலில் எப்ப, எப்ப சாப்பாடு போடுறாங்கள் என்டு அந்த "டேட்டாபேசில்" வைச்சிருப்பார்.

அந்த "டேட்டா பேஸ்சை" டயரியில் குறித்து வைத்திருந்து எந்தவித கவலையும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு சாமியாரா திரிவார். அந்த சாப்பாடு வாங்கிறதுக்கு என்டே ஒருத்தனை வேலைக்கும் வைச்சிருப்பார். அது போலதான் யாழ்ப்பாணக் கோவில்களில் அன்னதானம் வழங்குவதையும் குறிச்சு வைச்சிருந்தால் சாப்பாட்டு செலவை கட்டுப்படுத்தி அந்தக் காசுக்கு நல்ல வடிவா ஐஸ்கிறீம் கடையில போய் பமிலி பெசல்வாங்கிக் குடிச்சிட்டு படுக்கலாம்..... ( பியர், சாராயம் குடிக்கிறதைப் பற்றி எழுதவே கூடாது.... வாசிக்கிறவங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்கள்)

யாழ்ப்பாணக் கோவில்களில் ஒரு சிலவற்றில் எப்ப எப்ப அன்னதானம் கொடுக்கிறாங்கள் என்டு தெரிந்தாலும் பெரும்பாலான கோவில்களில் கொடுக்கப்படும் அன்னதானங்கள் பற்றி அந்த அயலுக்க இ இருக்கிறவையைத்தவிர வேறு ஒருத்தருக்கும் தெரியாமல் இருக்குது. பொதுவா நல்லூரில இருக்கிற துர்க்கா மணி மண்டபத்தில ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடை பாயாசத்தோட அன்னதானம் கொடுப்பாங்கள்.. அதை விட நயினாதீவு நாகபுசனி அம்மன் கோவிலிலும் ஒவ்வொரு நாளும் அன்னதானம் கொடுப்பாங்கள்... சன்னதியிலும் சாப்பிடலாம்... ஆனால் ஒவ்வொரு நாளும் அங்க போய் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டுப் போட்டு மனிசி பிள்ளைகளுக்கும் சாப்பாட்டைக் கொண்டு வரேலாது.... அதுதான் பெரிய சிக்கல்.. ( இதை விட பிச்சை எடுக்கலாம் என்டு சொல்ல வாறிங்களோ.... )

உண்மையில கோயில் அன்னதானத்தில சாப்பிடுற அருமையும் ருசியும் ஆருக்குத் தெரியும்?.... அதுவும் கிராமத்துக் கோவில்களில் போடப்படும் குழை சோறு சாப்பிட்டவங்கள் நாக்கைப் பொச்சடிச்சுக் கொண்டு போவாங்கள்..

நான் இஞ்ச போட்டிருக்கிறது எங்கட வயிரவர் கோயிலில நடந்த அன்னதான போட்டோக்கள்.... இந்த கோயிலில அடிக்கடி அன்னதானம் நடக்கும்.... அன்னாதானம் நடந்து குழை சோறு போட்டுக் குழைக்கிறதுக்கு என்டே பெரிய சில்வர் தட்டு வாங்கி வைச்சிருக்கிறாங்கள்....

அயலட்டையில இருக்கிற பெண்டுகள் எல்லாம் விடியக்காலத்தாலேயே கோயிலுக்குள்ள வந்திடுவினம்.... கத்தரிக்காய்இ வாழக்காய்இ பிலாக்கொட்டைஇ பிலாக்காய் என்டு விதம் விதமாக மரக்கறிகளை எல்லாம் வெட்டிக் கொண்டு ஊர்த்துளைவாரங்களும் கதைச்சுக் கொண்டு மும்முரமா அன்னதான வேலைக்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பினம்....

ஆனால் சமைக்கிறது ஆம்பிளைப்பிளைகள்தான் (நளபாகம்).... அதாலதான் அன்னதானச் சாப்பாடு நல்ல ரேஸ்ட்டா இருக்குது என்டு நினைக்கிறன்... வீட்டில பொம்பிளைகள் சமைக்கிறது கடன்வழிக்குத்தானே!!

அன்னதானம் செய்யிறவைகளில சில பேர் சமையல்காரர்களையும் பிடிச்சு சமைப்பினம்... சமையல்காரர்களிட வேலை என்னவென்டால் அடுப்புக்கு பக்கத்தில இருந்து எல்லாத்தையும் சமைச்சு இறக்கிறதுதான் வேலை... இங்க முக்கிய குறிப்பு ஒன்டு சொல்ல வேணும்... கடவுளுக்கு படைக்காமல் அகப்பைச் சிறட்டையால அள்ளி குழம்பை ரேஸ்ட் பாக்கேலாது....

இதைச் சாட்டாக வைச்சு அசண்டையீனமாக சமைச்சுப் பேய்க்காட்டி சமாளிக்கிறவங்களும் இருக்கினம்... குழை சோறில் இருக்கிற நன்மை என்னவென்டால் எல்லாக் கறியையும் தோத்துக்குள்ள வைச்சு குழைச்சு எடுக்கிறதால எந்தக் கறிக்கு உப்புக்கூட எந்தக்கறிக்கு உப்புக் குறைவுஇ எது ரேஸ்டா இருக்கிற கறி என்டு கண்டு பிடிக்கேலாது.. இது சமைக்கிறவங்களுக்கு நல்ல புளுகமாய் இருக்கும்..... ஆனால் எப்பிடித்தான் சமைச்சு இறக்கினாலும் கோயில் சோத்துட ருசி அருமைதான்....

அன்னாதானம் போடுற கோயில்களுக்கு வேட்டியோட போறதுதான் அழகு. அதோட நெத்தியில திருநீறு பட்டையும் போட்டிருந்தால் கொஞ்சம் மரியாதையா எல்லாம் எங்களுக்கு தருவாங்கள்.... அன்னதானம் தொடங்கேக்கு முதலே வேட்டியை கொஞ்சம் இளக கட்டிப் போட்டுத்தான் இருக்க வேணும்... இல்லாட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அவாவில கனக்க சாப்பிட்டால் வயிறு பெரிசாகி இட்டுமுட்டா இருக்கும்....

கோயில் அன்னதானங்களுக்கு போகேக்க ரண்டுமூன்டு சொப்பின் பாக்குகளும் பொக்கேற்றுக்குள்ள வைச்சிருக்க வேணும். அதோட இன்னொரு பெரிய லெதர் பாக் இல்லாட்டி 10 கிலோ அரிசி வாற உரப்பை போன்ற ஒன்றை எங்கட மோட்டச்சயிக்கில் இல்லாட்டி நாங்கள் கோயிலுக்கு வந்த வாகனத்தில வைச்சிட வேணும்.....

அப்பத்தான் அன்னதானம் நடக்கேக்க அந்த சொப்பின் பாக்குகளுக்குள்ளும் குழை சோறில் இருந்து எல்லாத்தையும் போட்டு பத்திரப்படுத்தி அந்த உரப்பையுக்குள்ள வைச்சிட்டு மனசி பிள்ளைகளுக்கு கொண்டு போகலாம். குழை சோறு வாங்கிப் போட்டு குழைசோறு எங்க வைச்சு குழைச்சாங்களோ அந்த இடத்தில போய் தலையைச் சொறிஞ்சு கொண்டு நிக்க வேணும்.... அங்கதான் முக்கியமான சமாச்சாரங்கள் இருக்குது.. அதாவது நல்ல உருளைக்கிழங்கு குழம்பு, பருப்பு, கத்தரிக்காயும் கடலையும் போட்ட பிரட்டல் கறி எல்லாம் சாப்பாட்டைப் பரிமாறுகிற மற்றும் கோயிலுக்குள்ள கெத்தா திரியிற பெடியல் தங்களுக்கு என்டு எடுத்து வைச்சிருப்பாங்கள்.... அவங்களிட்ட போய் எங்களிலும் கனக்க வயதில குறைஞ்சவங்கள் என்டால் அப்பு, ராசா என்டு கதைச்சு எங்களிட வயதானவங்கள் என்டால் அண்ணை, தம்பி போட்டு அருச்சுனன் கிளிக்கு அம்பு எய்தது போல அந்தக் கறிகளிலேயே கண் வைத்து தம்பி கொஞ்சம சாம்பாறு தனிய தருவீங்களோ? என்ர பெடியனுக்கு இல்லாட்டி பெட்டைக்கு இல்லாட்டி மனிசிக்கு காய்ச்சல் குழையல் சோறு சாப்பிடேலாது.. அதுதான் பாண் வாங்கிக் கொண்டு போகவேணும் என்டு கதை விட வேணும்... அந்த இடத்தில ஒருக்காலும் அவங்கள் சாம்பாறு வைச்சிருக்க மாட்டாங்கள்... நல்ல கறிகள்தான் பதுக்கி வைச்சிருப்பாங்கள்....

பெடிப்பிள்ளைகளுக்கும் ஒன்டும் செய்யேலாமல் போடும். இருக்கிற கறிகள் எல்லாத்திலும் கொஞ்சம் கொஞ்சமா விட்டு ஒரு சொப்பின் பாக்கில தருவினம;... அப்பிடியே அந்தக் குழம்பை தனிய கொண்டு வந்து இரவு நல்ல தேங்காய்ப்பு போட்டு புட்டவிச்சுப் போட்டு தின்ன குடுத்தெல்லலோ வைச்சிருக்க வேணும்....

 


தயவு செய்து அன்னதானம் கொடுக்கிற யாழ்ப்பாணத்து புண்ணியவான்களுக்கு ஒரு விண்ணப்பம்... செத்தவீடு, சாமத்தியவீடு, கலியாண வீடு என்டு கனக்க நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் பேப்பரில பெரிசா விளம்பரப்படுத்தி போடுறீங்கள்... ஏன் கோயில் அன்னதானத்தையும் அப்பிடி விளம்பரப்படுத்தி போடலாம் தானே!! அப்பத்தானே கன சனம் சாப்பிட வந்து உங்களுக்கும் புண்ணியம் கனக்க வந்து சேரும்... நானும் பேப்பரைப் பாத்து என்ர இடத்துக்குப் பக்கத்தில ஆராவது அன்னதானம் வைச்சால் அன்டைக்கு மனிசியை சமைக்க விடாமல் பண்ணிப் போட்டு அங்க வந்து நிக்கலாம்.....

நன்றி

thanapalasingam vasantharuban Facebook