யாழ் சிறைச்சாலையிலிருந்து வீழ்ந்து வடிவேலு பாணியில் இடுப்பை ஒடித்த மகிந்தன்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சுற்றுச் சுவர் ஏறிப் பாய்ந்து தப்பியோட முற்பட்ட கைதி சுவரிலிருந்து தவறி விழுந்து இடுப்பில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்றுமுற்பகல் இடம்பெற்றது. மகிந்தன் என்றழைக்கப்படும் குறித்த கைதிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றங்களில் திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சிறைச்சாலைத் தரப்புத் தெரிவித்தது.

“சிறைச்சாலையின் சுற்றுச் சுவர் மிக உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு வழியில் அவர் சுவரின் குறிப்பிட்ட உயரத்துக்கு ஏறிய நிலையில் தவறி விழுந்தார்.

 அதனால் அவர் இடுப்பில் மிகமோசமாசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கதறினார். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்” என்று சிறைச்சாலைத் தரப்பு மேலும் தெரிவித்தது.