குடாநாட்டில் மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பு!

குடாநாட்டில் திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரித்தமைக்கு தற்போதய வெப்பமான காலநிலை, வறட்சியே காரணம்  என வடமாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் செல்வராசா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

குடாநாட்டில் நிலவும் கடும் வெப்பத்தினால் மரக்கறி பூக்களின் மகரந்த சேர்க்கை பாதிப்படைந்து காய்க்கும் தன்மை குறைவடைந்துள்ளது. மேலும் சில பயிர்களின் தளிர்கள் கருகுகின்றன. அனேகமான விவசாயிகள் வறட்சியினால் பயிர்கள் பாதிப்படைந்ததால் அவற்றுக்கு தண்ணீர் இறைப்பதை நிறுத்திவிட்டனர். இதனாலேயே மரக்கறி விலைகள்  அதிகரித்துள்ளன.

இவ்வாறான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்குமாயின் பயிர்செய்கைக்கு பாரிய நீர் தட்டுப்பாடு  ஏற்படும். இதனால் மேலும் மரக்கறிகளின் விலைகள்  அதிகரிக்கும்  எனவும் தெரிவித்தார்.