கஞ்சா பாவிக்கும் காவாலிகளின் மோட்டார் சைக்கிளால் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

யாழ்ப்பாணம் வடலியடைப்பு பகுதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் பலியாகியுள்ளார்.

கஞ்சாh பாவிக்கும் பண்டத்தரிப்பு பனிப்புலத்தினை சேரந்த ஈ. ஜெஸ்ரின் என்னும் 17 வயது காவாலியான இவனுக்கு இன்று பிறந்த நாள் தி.கரன் என்னும் 17 வயதான காவாலியுடன் மது அருந்திவிட்டு சித்தன்கேணி சந்தியில் கையினை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிள் செலுத்தி வித்தை காட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவிகளை மோட்டார் சைக்கிளில் அச்சுறுத்தியபடி பண்டத்தரிப்பை நோக்கி மிகவேகமாக மோட்டார் சைக்களை செலுத்தும்போது வடலியடைப்பிலுள்ள வளைவினில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பொலிசாரின் மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது. அதில் படுகாயமடைந்த நால்வரும் யாழ் வைத்தியசாலையில் அனுமதித்தபோது அங்கு துரைராஜசிங்கம் உயிரிழந்தார். இவர் திருமண விடயம் தொடர்பாக வீடடிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    NP BAL 7192 என்னும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிளிலேயே தலைக்கவசமோ வேறு ஆவணங்களோ இன்றி மதுபோதையில் சென்றுள்ளனர்.இது சுள்ளான் எனப்படும் காவாலியான  காந்தரூபனுடையது. இதே போன்றே சித்தன்கேணி ,பண்டத்தரிப்பு ,சங்கானைப்பகுயில் காவாலிகளின் அட்டகாசம் தினமும் இடம்பெறுவதாகவும் தமது பிள்ளைகளை கல்விகற்பதற்கு அனுப்புவதற்கு அச்சமடைவதாகவும் மக்கள் தெரிவக்கின்றனர். பொலிசாருக்கே இந்த நிலையென்றால் சாதாரண பொதுமக்கள் எவ்வாறு வீதயில் செல்வது எனவும் தெரிவித்துள்ளனர் .இந்த மூன்று காவாலிகளுக்கும் கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவமானது யாழில் பொலிசாரின் செயல்திறனின்மைக்கு நல்ல எடுத்துக்காட்டு எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.