கண்களுக்கு அடியில் வீக்கமா? வீக்கத்தை குறைக்க உருளைக்கிழங்கு

சில பெண்களுக்குக் கண்ணுக்கு அடியில் வீங்கியிருக்கும். இதனை இலகுவாக மாற்ற வீட்டில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உருளைக் கிழங்கை உபயோகிக்கலாம்.

உருளைக் கிழங்கைத் தோலுடன் அரைத்து அந்த விழுதை சின்னச் சின்ன துண்டுத் துணியில் முடிந்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

குளிர்ந்த உருளை விழுது மூட்டைகளைக் கண்களுக்கு மேலே வைத்துக் கொண்டு 10 நிமிடம் ரிலாக்ஸ் (Relax) செய்து கொள்ளவும். இப்படி செய்துவர கண்களுக்கு அடியில் முகாமிட்டிருந்த வீக்கம் காணாமல் போய்விடும். கண்களும் பளிச்சென்று இருக்கும்.

வெள்ளரிக்காய் 2 துண்டு எடுத்து, சிறிது நேரம் ஊறியதும் 2 ஸ்பூன் உளுந்து சேர்த்து, அரைத்து, கண்ணுக்கு அடியில் தடவினால் கரு வளையம் காணாமல் போகும்.

கண்களில் தூசி விழுந்து விட்டால், சிறிது வெண்ணெயை மை இடுவது போல் இட்டால், கண் சூட்டில் வெண்ணெய் உருகி தூசியுடன் வெளி வந்துவிடும்.