காகித டம்ளரில் அப்துல் கலாம் உருவம்: கின்னஸ் சாதனை முயற்சியில் அசத்திய மாணவர்கள்!

கின்னஸ் சாதனை முயற்சியாக கோவை மணிகாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ மாணவியர்கள் இணைந்துமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் உருவப் படத்தை 2லட்சத்து 35 ஆயிரம் காகித டம்ளர்களை பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.

கோவை கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கேம்போர்டு இண்டர்நேஷனல் எனப்படும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளி மாணவ மாணவியர்கள் கின்னஸ் சாதனை படைக்க முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் உருவப்படத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர். அதன் படி, இன்று காலை பள்ளி மைதானத்தில் , சுமார் 167 மாணவ மாணவியர் ஒன்றிணைந்து காகித கோப்பைகளை பயன்படுத்தி அப்துல்கலாம் அவர்களின் உருவ படத்தை வடிவமைத்தனர். 10 ஆயிரத்து 560 சதுர அடியில் , கருப்பு ,வெள்ளை , நீலம் உள்ளிட்ட 5 நிறங்களிலான சுமார் 2 லட்சத்திது 35 ஆயிரம் காகித கோப்பைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காலை 6.30 மணியவில் துவங்கிய பணி மாணவ மாணவியர்களின் கூட்டு முயற்சியால் 3மணி நேரம் 40 நிமிடங்களில் முடிவடைந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு 1லட்சத்தில் 40 ஆயிரம் காகித கோப்பைகளை பயன்படுத்தி லக்னோவில் நடைபெற்ற சாதனையை முறியடிக்கும் வகையில் , பள்ளி மாணவ மாணவியர்கள் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், இதன் வீடியோ பதிவுகளை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான ஆதாரமாக அனுபப்பட உள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

கின்னஸ் சாதனை முயற்சியாக மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உருவ படத்தை காகித டம்ளர்களை வைத்து தத்துரூபமாக அமைத்து பள்ளி மாணவ மாணவியர்கள் அசத்தியுள்ளனர்.