மருத்துவரின் வீட்டுக்கு பெற்றோல்குண்டு வீச்சு

தனியார் வைத்தியசாலை ஒன்றை நடத்தும் மருத்துவரின் உடுவில் பகுதியில் உள்ள  வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் வைத்தியரின் தந்தையார் படுகாயமடைந்துள்ளார்.

உடுவில் ஆலடிப் பகுதியில் உள்ள குறித்த மருத்துவரின்; வீட்டின் மீதே நேற்று முன்தினம் இரவு 8 .30 அளவில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களால் மேற்படி பெற்றோல்  குண்டு வீசப்பட்டுள்ளது. இதன் போது பெற்றோல் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. 

வெடிச் சத்தத்தினால் பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவியதுடன் குண்டுத் தாக்குதலின்போது வீட்டில் நின்ற வைத்தியரின் தந்தை வயிற்றுப் பகுதியில்  காயமடைந்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு முறையிட்டதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டனர்.

எனினும் நேற்று இரவுக்குள் எவரும் கைது செய்யப்படவில்லை.