வாள் சண்டையில் அசத்தும் ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன், வாள் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள வரலாற்றுப் படம் ‘சங்கமித்ரா’. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் நடிக்கின்றனர். ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன்னுடைய உடலை ஃபிட்டாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதி. இதற்காக, லண்டன் பயிற்சியாளரையும்  நியமித்துள்ளார். 

வரலாற்றுப் படம் என்பதால், போர்க் காட்சிகள் கட்டாயம் இருக்கும். அதில், வாள் சண்டை, குதிரையேற்றம் போன்ற காட்சிகள் ஸ்ருதி ஹாசனுக்கு இருக்கும். எனவே, வாள் சண்டையைத் தீவிரமாகக் கற்று வருகிறாராம் ஸ்ருதி. வாள் சண்டையின்  அடிப்படை மற்றும் நுணுக்கங்களை அவர் கற்று வருவதாக கூறப்படுகிறது.