சிறுமி செய்த நெகிழ்ச்சி செயல்: கண் கலங்க வைக்கும் வீடியோ

உயிர் காப்பான் தோழன் என்பார்கள் இதற்கு ஒரு படி மேல் சென்று உயிரை காப்பவன் இறைவன் என்பார்கள்.

இவ்வாறு இந்த உலகத்தில் உள்ள மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக மனிதநேயம் கொண்ட மனிதர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற போற்றுதற்குறிய, மதிக்கப்படவேண்டிய இறைவனுக்கு ஒப்பான ஒரு செயல்தான் இரத்ததானமாகும்.

இந்த ரத்த தானம் செய்வதை குறித்த வீடியோவில் எவ்வளவு அருமையாக எடுத்துக் காட்டியுள்ளனர் என்பதை பாருங்கள்

இந்த இரத்ததானத்தின் ஊடாக உலகில் ஒரு நொடிப்பொழுதில் பல கோடிக்கணக்கான மனித உயிர்கள் காப்பாற்றப்படுவதாக கூறப்படுகின்றது.

ரத்த தானம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..

 • நல்ல உடல் நலம் உள்ள ஆண், பெண்; 18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு கீழ் இருப்போர்; குறைந்தது 45 கிலோ எடை இருப்போர், ஆகியோர் ரத்த தானம் அளிக்கலாம்
 • ரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு, 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான ரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்
 • ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், பெண்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும், ரத்த தானம் செய்யலாம்
 • குழந்தை பிறந்து, ஆறு மாதம் கழித்து பெண்கள் ரத்த தானம் கொடுக்கலாம் கருக்கலைப்பு செய்தோர், ஆறு மாதங்களுக்கு பின், அளிக்கலாம்
 • பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆறு மாதங்கள் கழித்து, ரத்த தானம் செய்யலாம்
 • பி.பி., உள்ளோர், ரத்த அழுத்தம் சரியாக இருக்கும் நேரத்தில் கொடுக்கலாம்தடுப்பூசி போட்டுக் கொண்டோர், நான்கு வாரங்களுக்கு பின், கொடுக்கலாம்நாய்க்கடி, மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்றோர், ௧௨ மாதங்களுக்கு பின், கொடுக்கலாம்
 • நோய் எதிர்ப்பு மாத்திரை (ஆன்டிபயாடிக்) சாப்பிடுவோர், 5 நாட்களுக்கு பின்பே, கொடுக்க முடியும்.
 • ரத்ததானம் செய்ய 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்; பின், ௨௦ நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.

யார் யார் ரத்த தானம் கொடுக்க முடியாது?

 • ஆஸ்துமாவிற்காக 'கார்டிஸோன்' மருந்து சாப்பிடுவோர் இதய நோய், வலிப்பு, ரத்தம் உறையாமை ஆகிய நோய்கள் உள்ளோர்காசநோய் உள்ளோர்
 • இன்சுலின் செலுத்தி கொள்வோர்
 • ரத்த தானத்திற்கு பின் என்ன செய்ய வேண்டும்?
 • திரவ உணவு அருந்த வேண்டும்
 • ஒரு மணிநேரத்திற்கு புகை பிடிக்க கூடாது
 • 6 மணி நேரத்திற்கு மது அருந்த கூடாது

ரத்தத்தின் வகைகள்

ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான்.

அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன.

ஒவ்வொருவரும் தங்களது ரத்த வகையை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ரத்த தானம் பெறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் ஏ வகை ரத்தத்தை மட்டுமே தானமாகப் பெறலாம். இது எல்லா வகை ரத்தத்திற்கும் பொருந்தும்.

ஆனால் ஏதாவது மிகுந்த நெருக்கடியான நேரங்களில் வேண்டுமானால் எந்த ஒரு ரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓ வகை ரத்தத்தை அவருக்கு செலுத்தலாம். அதேப்போன்று ஏபி ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வகை ரத்தத்தையும் அளிக்கலாம்.

தன் இரத்ததிலிருந்து

உயிர் கொடுப்பது

நம் தாய் மட்டுமல்ல !

நாமும் தான் .......

இரத்த தானம்

செய்தால் மட்டுமே ........!!

எனவே தயவு செய்து ரத்த தானம் செய்யுங்கள்....