பொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய இராணுவச் சிப்பாய் மீண்டும் மலேசியாவில்!

விடுதலைப் புலகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானுக்கு தகவல் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ சிப்பாய் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் மலேசியா நோக்கி சென்றுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பொட்டு அம்மானுக்கு தகவல் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ சிப்பாய் கப்டன் இந்திக்க சன்ஞீவ எனப்படும் சான் மொஹமட் யாழ். நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது கப்டனின் வாக்குமூலத்தை யாழ்ப்பாண நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர் மீண்டும் மலேசியா நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயற்பட்டதாக தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அவரை புலனாய்வு பிரிவினரால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னர் அவர் நாட்டை விட்டு தப்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.