நயன்தாராவிடம் தனது ஆசையை ஓப்பனாக கூறிய சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு பல நடிகர், நடிகைகள் ரசிகர்களாக உள்ளனர். அந்த வரிசையில் நடிகர் ஜெயம்ரவி,  சிவகார்த்திகேயனும் உள்ளனர். ஜெயம்ரவி தனி ஒருவன் படத்தின் மூலம் நயன்தாராவுடன் டூயட் பாடி தனது ஆசையை  நிறைவேற்றி கொண்டார்.

அவரைப்போன்றுதான் சிவகார்த்திகேயனும் நயன்தாராவின் தீவிரமான ரசிகராம். ஆனால் ஆரம்பத்தில் அவரை தன்னுடன் நடிக்க கேட்டால் என்ன சொல்வாரோ என தயங்கிய சிவகார்த்திகேயன், அவர் விஜய்சேதுபதியுடன் நானும் ரெளடிதான் படத்தில்  நடித்ததை அடுத்து கண்டிப்பாக அடுத்து நயன்தாராவுடன் நடித்தே தீருவது என்று மோகன்ராஜா தன்னிடம் வேலைக்காரன்  படத்திற்காக கதை சொல்ல வந்தபோதே நயந்தாராதான் இந்த பட நாயகி என்று அடித்து சொல்லிவிட்டாராம்.

தற்போது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதோடு மட்டும்  அல்லாமல் உங்களுடன் டூயட் பாடவேண்டும் என்ற கனவு இப்போதுதான் நிறைவேறியுள்ளது என்று நயன்தாராவிடமே ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.