விஜய்சேதுபதி படத்தில் மீண்டும் நயன்தாரா?

விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து மீண்டும் இந்த ஜோடி ஒரே படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த முறை விஜய்சேதுபதி நடிக்கும் படத்தில் நயன்தாரா, சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியில் 25வது படத்தின் டைட்டில் 'சீதக்காதி' என்பதும், இந்த படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிகராகவே நடிக்கவுள்ளார். நாயகியே இல்லாத இந்த படத்தில் பல பிரபல நாயகிகள் நடிகைகளாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் இதுவரை விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் அனைவருமே ஓரிரண்டு காட்சிகளில் நடிக்கவுள்ளதாகவும், அந்த வகையில் நயன்தாராவும் ஒருசில காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.