சிம்பு நழுவவிட்ட அந்த இரண்டு ஹிட் படங்கள்!!

சிம்பு தற்போது தான் வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா என தொடர்ச்சியாக படங்களை கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார்.

அடுத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இதற்கு முன் சிம்பு இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இழந்துள்ளார் என்பது பலருக்கு தெரியாது.

ஆர்யா- மாதவன் நடிப்பில் வெளியான வேட்டை படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது சிம்பு தான். ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து விலகினார்.

அதேபோல் வெற்றிப்படமான கோ படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்க கமிட் ஆனார். அவருக்கு வில்லனாக வினய் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த படமும் கைமாறியது என்பது குறிப்பிடத்தக்கது.