இந்திய கடலில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடல் எல்லைக்குள் சென்று சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 7 இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தமிழ்நாடு நாகப்பட்டினம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் சென்றிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகையும் இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளது.