வித்யா கொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு இன்று நடந்தது

புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மே 03 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை தொடர்பான வழக்கு இன்று (19) ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பதில் நீதவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான உத்தரவை வழங்கினார்.

சந்தேகநபர்கள் 12 பேரும் கடும் பாதுகாப்புடன் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டதோடு, நீதிமன்றிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா, கடந்த 2015 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.