சாவகச்சேரியில் ஆறுகிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் ஆறுகிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினர் நேற்று சாவகச்சேரி பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற நபர் வசமாக சிக்கிக் கொண்டதாக கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து ஆறுகிலோ, 265 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனை எடுத்துச் செல்லப்பயன்பட்ட மோட்டார் சைக்கிளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் சந்தேக நபர் மற்றும் கஞ்சாப் பொதிகள், மோட்டார் சைக்கிள் என்பன மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.