தாய்லாந்தில் 12 வயதுச் சிறுமியைக் கட்டிப்பிடித்த யாழ்ப்பாண காப்புறுதி முகவர்!

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்குப் பகுதிகள் எங்கும் கடை பரப்பி மக்களிடம் இருந்து காப்புறுதி என்ற பெயரில் பணத்தைக் கறக்கும் செயற்பாடுகளில் தென்பகுதிச் சிங்கள பணமுதலைகளின் நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. குறித்த நிறுவனங்களில் அடிமைகள் போல் சேர்ந்து தமது மக்களிடமே பணத்தைப் பெற்று அந்த நிறுவனங்களுக்காக வேலை செய்ய பல வேலையற்ற தமிழ் இளைஞர் யுவதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறனவர்களில் கூடுதலாக மக்களிடம் இருந்து பணத்தைக் கறக்கும் ஊழியர்களுக்கு குறித்த நிறுவனம் ”நாய்க்கு எழும்புத் துண்டைப் போடுவது ” போல் சில சலுகைகளை அளிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்ல அனுப்புவது. இவ்வாறான சலுகையைப் பெற்ற யாழ்ப்பாண காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தமிழ் இளைஞர் ஒருவர் தாய்லாந்தில் செய்த வேலையால் சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலைக்கு உட்பட்டார்.

அங்குள்ள பொழுது போக்கிடம் ஒன்றில் காணப்பட்ட மின்சார ராட்டணம் ஒன்றில் ஏறியுள்ளார் குறித்த இளைஞர். அதில் ஏறிய பின் அது சுற்றிய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது தனக்குப் பக்கத்தில் இருந்த 12 வயதான தாய்லாந்துச் சிறுமியைக் கட்டிப்பிடித்ததாக தெரியவருகின்றது. ராட்டணம் சுற்றி முடிந்து இளைஞர் இறங்கிய போது அங்குள்ள பொலிசாரால் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தற்போது குறித்த காப்புறுதி நிறுவனம் குறித்த இளைஞனை பெரும்பாடுபட்டு பிணையில் எடுத்து தமது நற்பெயரைக் காப்பாற்றியுள்ளதாம். ஆனாலும் வழக்கு முடியும் வரை குறித்த இளைஞன் தாய்லாந்திலேயே தவம் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.