கொழும்பில் பணக்கார சிங்கள யுவதிகள், குடும்பப் பெண்களை ஏமாற்றிய யாழ் மன்மதன்!

கொழும்பில் வசித்து வரும் பணக்கார சிங்கள யுவதிகள் மற்றும் இளம் சிங்கள குடும்பப் பெண்களை பாலியல் உறவு கொண்டு அவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தையும் சுருட்டிக் கொண்டு கிழக்காசிய நாடு ஒன்றுக்கு ஓடிய

 27 வயதான யாழ்ப்பாண மன்மதன் ஒருவரை கைது செய்வதற்கு கொழும்பு பொலிசார் மிக ரகசியமான நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.

குறித்த மன்மதன் கொழும்பில் உள்ள பிரபல காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்ததாகவும் காப்புறுதி செய்வதற்கு முயன்ற பல பணக்கார சிங்கள யுவதிகள், குடும்பப் பெண்களை வசப்படுத்தி அவர்களுடன் பாலியலுறவு கொண்டது மட்டுமல்லாது அவர்களைக் காதலிப்பதாகத் தெரிவித்தும் சிலருடன் பாலியலுறவு கொண்டு அவர்களை அது தொடர்பாக தகவல்களை வெளியிடுவேன் என அச்சுறுத்தியும் சுமார் 3 கோடி ரூபாவுக்கு மேல் ஏமாற்றிவிட்டு மலேசியாவுக்கு சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது.

குறித்த மன்மதன் நிதியைச் சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டதாக இவனைக் காதலித்த சிங்களப் பெண் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து அவனது வங்கிக் கணக்குகள் ஆராயப்பட்டதுடன் அவன் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவல்களை வைத்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த மன்மதனின் பாலியல் லீலைகள் தொடர்பான வீடியோ அவனது தொலைபேசியில் இருந்து காதலியால் கைப்பற்றப்பட்டதன் பின்னரே அவன் வெளிநாட்டுக்கு  தலைமறைவாகியுள்ளதாகவும் குறித்த வீடியோவில் உள்ள பெண்கள் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டபோதே அவனது தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவருகின்றது.