வருடப்பிறப்பிற்கு நண்பர்களுடன் காதலி வீட்டுக்குப் போனவருக்கு நடந்த கதி!

யாழ் இணுவில் பகுதியில் புதுவருட தினமான இன்று தனது காதலியின் வீட்டுக்குச் சென்ற காதலனும் நண்பர்களும் காதலியின் குடும்பத்தினர் மற்றும் அயலவர்களால் நையப்புடைக்கபட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ் உயர் தொழிற்நுட்பக் கல்லுாரி மாணவி ஒருவரின் வீட்டுக்கு குறித்த கல்லுாரியில் பயிலும் அவளது காதலன் தனது நண்பர்களுடன் காதலிக்கு தெரிவிக்காது அவளது வீட்டுக்குச் சென்றுள்ளான். இவர்கள் குறித்த வீட்டு்க்குச் சென்ற போது . மாணவியும் தாயாரும் கோவிலுக்குச் சென்றுவிட்டதால் மாணவியின் அண்ணன் மற்றும் அவனது நண்பர்களும் அங்கு நின்றுள்ளார்கள். இவர்கள் சென்ற விடயம் தொடர்பாக அண்ணன் அவர்களை விசாரிக்கும் போது குறித்த மாணவி தனது காதலி என தெரிவித்துள்ளான் குறித்த மாணவன். இதனால் அங்கு வாக்குவாதம் முற்றி காதலனும் அவனது நண்பர்களும் நையப்புடைக்கப்பட்டதாகவும் அவர்களது மோட்டார் சைக்கிள் அடித்து நொருக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.