முல்லைத்தீவு வர்த்தகர்களின் திருவிளையாடல்கள்!! ஒருவர் கைது!! ஏனையோருக்கு நடக்கப் போவது என்ன?

முல்லைத்தீவு பகுதியில் வர்த்தகர்கள் பலர் செய்த நிதிமோசடி திருவிளையாடல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீற்றர்வட்டி, கிலோமீற்றர்வட்டி, கந்துவட்டி என பல பெயர்களில் தற்போது பலர் வட்டிகளை அறவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள், பலர் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான வட்டிக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் சட்டவிரோதமானது எனத் தெரிந்தும் பலரும் இதில் ஈடுபட்டு தமது வாழ்க்கையைத் தொலைத்தவண்ணம் உள்ளார்கள்.

முல்லைத்தீவுப் பகுதியில் 8 வர்த்தகர்கள் சேர்ந்து 12 கோடி ரூபாவை தனி நபர்களிடம் இருந்து கந்து வட்டிக்குப் பெற்று வட்டியையும் முதலையும் கட்டாது பெரும் திருவிளையாடல்கள் புரிந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகுரு ஹாட்வெயர் முதலாளி ஜசோதரன், அம்பிகா களஞ்சிய முதலாளி ஜெகதீஸ்வரன், ஜென்சி ஹாட்வெயர் முதலாளி பெனடிக் இன்னும் ஒரு சில பிரபல வர்த்தகர்களிடம் இருந்து 12 கோடிரூபாவுக்கு மேல்  குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதை வேறு சில வர்த்தகர்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார் அம்மன் ஹாட்வெயர் முதலாளி ஜீவராஜ் என்பவர்.

ஜீவராஜ் அதிக வட்டிக்கு கடன் கொடுத்த வர்த்தகர்கள்,  வாணிவிலாஸ் உரிமையாளரான ஜெகன் என அழைக்கப்படும் சுகந்தன், சின்னக்கண்ணன் கட்டடப்பொருள் உரிமையாளர் நந்தன், நிஸா ஆட்ஸ் உரிமையாளர் நிஸா மற்றும் பொக்கான் என அழைக்கப்படும் நிசாந்தன், மற்றும் பல வர்த்தகர்கள் ஆவர். அவர்களின் பெயர் விபரங்கள் கீழே உள்ள துண்டுப்பிரசுரத்தில் தெளிவாக குறிக்கபட்டுள்ளது.

 ஜீவராஜிடம் கடன் பெற்ற வர்த்தகர்கள் அவனிடம் இருந்து பெற்ற கடனைக் கொடுக்காமல் விடுவதற்கு திட்டம் தீட்டினர். இந்த திட்டத்துக்கு கிளிநொச்சி பொலிஸ் நிலைய எஸ்எஸ்பி தர பொலிஸ் அதிகாரிக்கு குறிபிடத்தக்க லஞ்சம் கொடுத்து ஜீவராஜிடம் பெற்ற கடனைக் கட்டாமல் விட்டுவிட்டார்கள். இது தொடர்பாக ஜீவராஜ் பொலிசாரிடம் முறையிட்டு கொடுக்கப்பட்ட லஞ்சம் காரணமாக அவனது முறைப்பாடு பொலிசாரிடம் எடுபடாது போய்விட்டது.

அதே வேளை பொலிஸ் அதிகாரியின் திட்டமிடலில் ஜீவராஜ் தங்களை அச்சுறுத்தியதாகவும் துண்டுப்பிரசுரம் ஒட்டியதாகவும் போலியான துண்டுப்பிரசுரத்தை அவர்களே ஒட்டிவிட்டு ஜீவராஜிற்கு எதிராக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்கள். இது தொடர்பாக லஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜீவராஜை இனிவரும் காலம் கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் கொடுத்த காசைக் கேட்க கூடாது எனவும் அச்சுறுத்தி அனுப்பியுள்ளனர்.

இதனால் இடிந்து போன ஜீவராஜ் தான் கடன் வாங்கிய ஜசோதரன் உள்ளிட்ட வர்த்தகர்களுக்குச இது தொடர்பாக முறையிட்டு தனது நிலையைக் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த வர்த்தகர்கள் கொழும்பில் உள்ள நிதிமோசடிப் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்கள். உடனடியாக செயற்பட்ட நிதிமோசடிப் பொலிசார் விசுவமடு வந்து கடனுக்கு பணம் பெற்ற ஒரு வர்த்தகரைக் கைது செய்ததுடன் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மீற்றர் வட்டி, கந்து வட்டி எனப் பணம் வாங்குபவர்கள் குழந்தைப்பிள்ளைகள் அல்ல. அந்த வட்டி எவ்வாறனது எனத் தெரிந்தே வாங்குகின்றார்கள். அவ்வாறெனின் அவர்கள் குறித்த பணத்தைக் கட்டாமல் இருப்பதற்காக இவ்வாறான திருவிளையாடல்களை நடாத்தி பொலிசாரைக் கைக்குள் வைத்துக் கொண்டு வாங்கும் பணத்தை கட்டாது ஏமாற்றுகின்றார்கள். இதே போல் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பது சட்டவிரோதமானது எனத் தெரிந்து பதிவு செய்யப்படாது நிதிநடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜீவராஜிம் குற்றவாளியே. இவ்வாறானவர்களின் நடவடிக்கையால் பல்வேறு சிக்கல்கள் வர்த்தகர்களுக்கிடையே ஏற்பட்டு வருகின்றது.

இதே போலவே வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் தமிழர்களின் உழைப்பை வட்டி என்ற அரக்கன் உறுஞ்சிக் கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிடிபட்ட வர்த்தகர் நிசாகரன்

பிடிபட்ட வர்த்தகர் நிசாகரன்

நிசாகரன் உள்ளிட்ட வர்த்தகர்களுக்கு மீற்றர் வட்டிக்கு கடன் கொடுத்த ஜீவராஜ். இவரும் வேறு வர்த்தகர்களிடம் குறைந்த வட்டிக்கு பணம் பெற்றே மீற்றர் வட்டிக்கு கொடுத்துள்ளார்.

நிசாகரன் உள்ளிட்ட வர்த்தகர்களுக்கு மீற்றர் வட்டிக்கு கடன் கொடுத்த ஜீவராஜ். இவரும் வேறு வர்த்தகர்களிடம் குறைந்த வட்டிக்கு பணம் பெற்றே மீற்றர் வட்டிக்கு கொடுத்துள்ளார்.