நெடுந்தீவு சிறுமி கொலை!! குற்றவாளிக்கு துாக்குத் தண்டனை தீர்ப்பு

கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற சிறுமி கந்தசாமி ஜெயதீஸ்வரன் என்ற காமுக கொலைகாரனால் கடத்தப்பட்டு கொடூரமா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது வழக்கு தொடுனர் சார்பில் அழைக்கப்பட்ட சாட்சியங்களின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டதையடுத்து, எதிரி தனது வாக்குமூலத்தை சாட்சி கூட்டில் நின்று அளித்தார்.

அதனை தொடர்ந்து அரச சட்டத்தரணி நா.நிஷாந்த் தொகுப்புரையில் குறிப்பிடுகையில் எதிரிக்கு கொலை குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து எதிரி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி பா. ரஞ்சித்குமார் எதிரி இக் குற்றத்தை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என தனது தொகுப்புரையில் குறிபிட்டார். அதனை தொடர்ந்து குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வெள்ளிகிழமை வழங்கப்பட்டது.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் குறித்த ஜெகதீஸ்வரனுக்கு துாக்குத்தண்டனை மற்றும் 20 வருடகடூழிய சிறை என்பவற்றுடன் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

மேலும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடும் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபரை நெடுந்தீவு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தன.

இதில் “நான் கொலை செய்யவில்லை” என குறித்த நபர் தெரிவித்த போதும் அனைத்து சாட்சியங்களும் அவருக்கு எதிராகவே காணப்பட்டுள்ளன. இந்த நிலையில் 5 வருடங்களுக்குப்பிறகு குறித்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.