தர்பூசணியை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா?

கோடைக்காலத்தில் வெயிலினால் ஏற்படும் உடல் வெப்பத்தை குறைப்பதற்காக நாம் அதிகளவு பழங்களை எடுத்து கொள்வோம். வெயில் காலத்தில் அதிகளவு நாம் சாப்பிடும் பழம் தர்பூசணி.

தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீரே நிறைந்துள்ளது. தினம் காலை அல்லது மதிய உணவுடன் தர்பூசணி பழத்தினை சேர்த்து கொள்வது நம் உடல் வெப்பத்தினை குறைக்க பெரிதும் உதவுகிறது என கூறுகின்றனர் மருத்துவர்கள்.

எப்படி வாங்க வேண்டும்?

தர்பூசணி பழத்தினை வாங்கும்போது அதை கைகளில் எடுத்து பார்க்கவேண்டும். அது அதிக எடையுள்ளதை போன்று தெரிந்தால் அது நீர்ச்சத்தானது அதிகம் உள்ளது.

பழத்தின் மீது அதிக வெண்மையாகவோ அல்லது மஞ்சள் நிறத்திலோ காணப்பட்டால் நன்கு கனிந்த பழமாகும். மாறாக பச்சை நிறத்தில் காணப்பட்டால் நன்கு காய்க்கும் முன்னரே பறிக்கப்பட்டதாகும். அதில் அதிக நீர் சத்தானது இருக்காது.

பழமானது அதிக பச்சை நிறத்தினை உடையதாக இருந்தால் அதிகளவு இனிப்பு தன்மையினை கொண்டிருக்கும்.

பயன்கள்

தர்பூசணியில் அதிகளவு நீர்ச்சத்தானது உள்ளதால் உடலில் நீரின் அளவு குறையாமல் இருக்கும்.

மேலும் இதில் உள்ள கலோரிகள் உடல் எடையினை குறைக்க உதவுகிறது.

தர்பூசணியில் விட்டமின் பி மற்றும் சி, பொட்டாசியம் சத்தானது அதிகம் உள்ளது.

தர்பூசணியினை சாப்பிடும் போது அதிலுள்ள விதைகளை நாம் கீழே போட்டு விடுவோம். ஆனால் விதையில் தான் அதிகளவு விட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. இந்த விதைகளை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து அரைத்து முகத்தில் பூசலாம்.