மலச்சிக்கலா? அப்போ இதை உடனடியாக குடியுங்கள்

செரிமான செயலில் தாமதமோ அல்லது ஏதாவது குளறுபடியோ ஏற்படும் போது, குடலின் இயக்கம் செயல்படாமல் நச்சுக்களை உடலினுள் தேக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

எனவே மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தேநீர் இதோ!

தேவையான பொருட்கள்

  • தண்ணீர் - 2 டம்ளர்
  • பேரீச்சம்பழம் - 150 கிராம்
  • பிளம்ஸ் - 150 கிராம்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து, அதில் பேரீச்சம்பழம் மற்றும் பிளம்ஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.

பின் அதை 15 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வைத்து இறக்கி, அந்த நீர் ஆறியதும் பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை

இந்த தேநீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் குடிக்க வேண்டும்.

நன்மைகள்

இந்த தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான வேலை நன்கு நடைபெற்று உடலில் நச்சுக்கள் தேங்கி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்படும்.

குறிப்பு

இந்த பானத்தை நீங்கள் குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியமாகும். மேலும் இந்த பானத்தை தொடர்ந்து 2 அல்லது 3 நாளைக்கு மேல் குடிக்கக் கூடாது.