சிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த 21 வயது பெண் - கேரளாவில் அதிர்ச்சி

சிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஒரு 21 வயது இளம் பெண்ணிற்கும், 17 வயது சிறுவனுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அதன் பின் அவர்கள் உறவு நெருக்கமாக தொடங்கியதும், இருவரும் தகாத உறவிலும் ஈடுபட்டுள்ளனர்.

இது எப்படியோ தெரிந்து கொண்ட அந்த சிறுவனின் தயார், இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தார். எனவே, விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மேலும், அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.