உங்கள் எடை எப்படி குறையும் தெரியுமா? இரவில் தூங்கும் ஒரு மருந்து

ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்குமே தெரியும். அதேப் போல் ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் கிடைத்தால், உடல் எடையை குறைக்கலாம்.

ஆனால் அப்படி தூங்கும் முன் ஒருசில செயல்களை செய்தால், இன்னும் வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா, ஆம், இக்கட்டுரையில் தூங்கும் முன் எந்த செயல்களை செய்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து பின்பற்றி, எளிய முறையில் உடல் எடையைக் குறையுங்கள்.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் உள்ள ப்ளேவோனாய்டுகள் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். அதிலும் ஒரு நாளைக்கு 3 கப் க்ரீன் டீ குடித்தால், ஒரே நாளில் 3.5 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் இரவில் தூங்கும் முன் ஒரு கப் க்ரீன் டீ குடித்தால், இன்னும் நல்லது.

குளியல்
இரவில் தூங்கும் முன் குளிர்ந்த நீரில் குளித்தால், உடலில் இருந்து 400 கலோரிகள் எரிக்கப்படுவதாக பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி
மாலை வேளையில் அலுவலகம் முடித்துவிட்டு, ஜிம் சென்று உடற்பயிற்சியை செய்வதன் மூலம், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, இரவில் தூங்கும் போது அதிகமான அளவில் கலோரிகள் எரிக்கப்பட்டு, வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுமாம்.

புரோட்டீன் ஷேக்கை மாற்றுங்கள்
வேகமாக உடலில் புரோட்டீனை வெளியிடும் புரோட்டீன் ஷேக்கைக் குடிப்பதற்கு பதிலாக, மாலையில் உடற்பயிற்சி செய்த பின், மெதுவாக புரோட்டீனை வெளியிடும் ஷேக்கைக் குடிப்பதால், இரவு நேரம் முழுவதும் உடலின் மெட்டபாலிச அளவு நீடித்து, உடல் எடை வேகமாக குறையும்.

குளிர்ச்சியான அறையில் தூக்கம்
வட அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில், குளிர்ச்சியான அறையில் தூங்குவதால் 7% அதிகமாக கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதாக தெரிய வந்துள்ளது.