ரஜனியைத் திட்டமிட்டு தற்கொலை செய்வதற்கு துாண்டிய காவாலிகள்!

நல்லுாரடியில் இன்டைக்கு ரஜனியை இஞ்ச வரவைப்பதற்கான ஆதரவுப் போராட்டம் ஒன்டு நடந்தது. யாழ்ப்பாணத்தில் 99 வீதமானவர்கள் எழுதுப்படிக்கத் தெரிஞ்சவர்கள். மிகுதி ஒரு வீதமானவர்களே எழுத்தறிவு குறைந்தவர்கள். யாழ்ப்பாணச் சனம் எவ்வளவு கஸ்டப்பட்டாலும் படிப்பைக் கைவிடாதுகள். யாழ்ப்பாணத்தில இருக்கிற எழுதப்படிக்கத் தெரியாத ஒரு வீதமானதுகளில செரியான பிக்காலித்தனமான போக்குள்ளவர்களில் ( ரஜனியால் வில்லன்கள் என பந்தாடப்படுபவர்கள் போல் உள்ள) சிலரைத் திரட்டி அவர்களின் உறவுகளையும் கிழடு கட்டைகளையும் கொண்டே இந்த ஆர்ப்பாட்ம் நடாத்தப்பட்டது.

இதில் இன்னொரு முசுப்பாத்தி என்னவென்டால் நானும் ஆர்ப்பாட்டம் எப்புடி நடக்குது என்டு விடுப்புப் பாக்கப் போய் தேவையில்லாமல் அதுகள ஏத்தி வந்த ஒரு வான் றைவரிட வானை படம் பிடிக்க முற்பட்டு அவன் தன்ர வில்லத்தனத்தை தன்ர அடியாட்களோட காட்ட முற்பட்டுவிட்டான்.

நான் என்ன ரஜனியோ... பாஞ்சு பாஞ்சு புரட்டி எடுக்க.... வடிவேலப் போல அப்புடியே... ”வாடா... வாடா....” என்டு சொல்லிக் கொண்டு ஓடிவந்துட்டன்.......

உண்மையா ரஜனி ரகசியமா இஞ்ச வந்து இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்திருந்தால் ”லைக்காகாரனுக்கு செவிட்டைப் பொத்தி ஒரு அறை விட்டுப்போட்டு துாக்கில தொங்கி தற்கொலை செய்திருப்பார்.......

”ஏன்டா... டேய்... ஏன்டா..... உங்களுக்கு இந்த வேலை””””

காவாலிகள் வந்து அச்சுறுத்திய வெள்ளை வான் இதுதான்

காவாலிகள் வந்து அச்சுறுத்திய வெள்ளை வான் இதுதான்