யாழில் அக்குபஞ்சர் வைத்தியரால் யுவதிகள், மாணவிகள் பாலியல்துஸ்பிரயோகம்!!

யாழ் பன்னாகம் பகுதியில் அக்குபஞ்சர் வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்டு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த திருவருள்சாமி கெங்காதரன் எனும் வைத்தியர் அங்கு வைத்தியத்துக்காகச் சென்ற பல பெண்களுடன் பாலியல் லீலைகளில் ஈடுபட்டுள்ளார்.

 நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி ஒற்றைத்தலைவலி போன்ற நோய்களைக் குணமாக்குவதாகத் தெரிவித்து அவன் பல திருவிளையாடல்களைச் செய்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. அப்பகுதியில் விளம்பர பலகை கூட வைக்கது வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தே இவன் வைத்தியம் செய்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

கொழும்பில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்றில் தனது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் வழங்கி பலரையும் தனது இடத்துக்கு வரவழைத்து வைத்தியம் செய்து வந்ததாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களிலும் இவன் பல வீடுகளை எடுத்து அந்தந்த பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு தொலைபேசியிலேயே நேரம் ஒதுக்கி அங்கு வரச் செய்து வைத்தியம் செய்துள்ளான்.

யாழ்ப்பாணத்தில் பன்னாகம் பகுதியிலும் மாதத்தில் சில நாட்கள்  தங்கியிருந்து இவன் வைத்தியம் செய்ததாகத் தெரியவருகின்றது. இவனிடம் வைத்தியம் பார்ப்பதற்காக  சென்ற பெண்களில் இளமையான தோற்றம் கொண்டவர்களை இவன் தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியதாகவும், யாழ் நகர்ப்பகுதியில் பிரபல வர்த்த நிறுவனத்தை நடத்தும் வர்த்தகர் ஒருவரின் மகளும் இவனின் பாலியல் வேட்டைக்குப் பலியாகியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த வர்த்தகரின் மகளை வர்த்தகரின் குடும்பத்துக்கு தெரியாது தன்னுடன் வேறு இடத்துக்கு கடத்திச் செல்ல முற்பட்ட போது, குறித்த சம்பவத்தை முற்கூட்டியே அறிந்த வர்த்தகர் அவனது இடத்தை தனது அடியாட்களுடன் சுற்றி வளைத்த போது அவன் ஓடித்தப்பியதாகத் தெரியவருகின்றது.

அங்கு அவனுடன் வேலை செய்த 50 வயதான பெண் ஒருவரை பிடித்து வர்த்தகர் விசாரித்த போதே  இவனது திருவிளையாடல்கள் அம்பலமாகியுள்ளன. இருப்பினும் தனது மகளின் திருவிளையாடலும் வெளியே வந்துவிடும் என்ற காரணத்தால்  இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட வர்த்தகர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வர்த்தகருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.