கோத்தாவிற்கு கிறுக்குப் பிடித்ததாம் பொங்கி எழுந்தார் டக்ளஸ்…!

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய கிறுக்குத்தனமாக பேசிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அங்கு உரையாற்றிய அவர் நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தல் காலத்தில் தம்வசமுள்ள ஆயுதங்களை களைய வேண்டாமென டக்ளஸ் தேவானந்தா தன்னை கேட்டுக்கொண்டதாக கோத்தபாய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஆயுதக்களைவு நடக்காவிடின் ஈபிடிபி வடமாகாணசபையை வென்றிருக்கும் தனது சகோதரராக மஹிந்த ஜனாதிபதி ஆகியிருப்பாரென ஆருடம் சொல்லியுள்ளார்.

வுழமையாக கோத்தபாய எது சொன்னாலும் பொய் எனும் கூட்டமைப்பினர் இதனை மட்டும் தூக்கிபிடித்து திரிகின்றனர்.
நான் அவ்வாறு கேட்கவுமில்லை. அவர் அவ்வாறு சொல்வது வடிந்தெடுத்த முழு பொய் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு கிறுக்குத்தனமாக பேசுவதை கோத்தபாய தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை முந்தைய ஆட்சியாளர்கள் கைது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் அதில் அரசியல் பழிவாங்கலும் உண்மையும் கலந்திருப்பதாக தெரிவித்தார்.

எனினும் விசாரணைகள் முடிவுற்றதுமே உண்மைகள் தெரியவருமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.