உலக இளையோர் அமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

உலக இளையோர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது உலக இளையோர் அமைப்பின் பிரதிநிதிகளினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் நட்பு ரீதியில் பதிலளித்தார்.

உலகளாவிய ரீதியில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள், இலங்கையின் அபிவிருத்தி, இளையோர் தொடர்பான எதிர்கால திட்டங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சுமார் 30 திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதன்போது பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.