ஜேர்மன் அதிபரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ஏஞ்ஜலா மேர்கலை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பானது பெர்லின் நகரில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளைய தினம் அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி மைத்திரி, அதன் பின்னர் அங்கு நடைபெறவுள்ள வர்த்தக அமைப்பின் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

43 வருடங்களின் பின்னர், இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ஜேர்மன் சென்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.