பிரதமர் அனைத்து மாகாணங்களுக்கும் விஜயம்!

தேசிய அரசாங்கத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து மாகாணங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் முதல் அரையாண்டு காலப் பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராயப்படவுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் நேரடியாக சென்று ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மதிப்பீடு செய்யவுள்ளார்.

இதன் முதல் கட்டமாக அண்மையில் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திற்கு பிரதமர் விஜயம் செய்துள்ளார்.

அடுத்த கட்டமாக தென் மாகாணத்திற்கு பிரதமர் விஜயம் செய்யவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் இந்த விஜயங்களின் போது பிரதமருடன் இணைந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.