யாழ்ப்பாணக் காவாலிக் குஞ்சுமணிகளின் வாள் வீச்சுக்களின் பின்னணி என்ன?

குறித்த காட்சிகளில் கடை ஒன்றினுள் நுழைந்த காவாலிகள் சிலர் இளைஞன் ஒருவனை வாள்களால் 15 தடவைகள் வெட்டுவது காட்டப்பட்டுள்ளது. வெட்டு வாங்கிய இளைஞன் கோழிச் சேவலால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு எழுந்து ஓடும் கோழி போல சாதாரணமாக ஓடிச் செல்கின்றான். அவனது உடம்பில் பெரும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

உண்மையில் இந்தக் காவாலிகள் கொண்டு வந்த வாள்கள் அவர்களது ஆண் தன்மை போல்  செயற்படாத  வாள்களா? அல்லது  வெட்டு வாங்கியவன் சினிமாப் படங்களில் நடிக்கும் விஜயகாந் போல இரும்பே அச்சப்படும் அளவுக்கு வலிமையானவனா?  அல்லது வடிவேலுவைப் போல வாள் வெட்டில் ஈடுபட்ட காவாலிகள் அந்த விசயத்துக்கு சரிவராதவர்களா?? 

மிகத் திட்டமிட்டு நடாத்தப்பட்ட நாடகமே குறித்த வாள் வெட்டாகும். எதற்காக நடாத்தப்பட்ட நாடகம்  என குறித்த வீடியோவைப் பார்வையிட்ட பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் இவ்வாறான சம்பவங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள படைத்தரப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் சந்தேகமடைகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டுவரும் முக்கிய வாள்வெட்டுச் சூத்திரதாரிகள் தற்போது சுதந்திரமாக உலா வருகின்றனர் எனவும் அவர்களில் சிலர் படையினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர் எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றவாளிகளின் புகைப்படங்கள் பல தற்போது ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அப் புகைப்படங்களைப் பார்க்கும் போது அவர்கள் மிகவும் சுதந்திரமாகத் திரிவதும் இராணுவத்தினரின் நெருங்கிய பங்களிப்புடன் வாள் வெட்டுக்களை மேற்கொள்வது போல் தெரிவதாக புகைப்படங்களைப் பார்த்த பல பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாண ரவுடிகளின் கூட்டத்திற்கு படைத்தரப்பால் வழங்கப்படும் வாள்ப் பயிற்சி, கத்தி, பொல்லுகள் போன்றவற்றைப் பாவிக்கும் ஆயுதப்பயிற்சி என ஊடகங்களில வந்த செய்தி

யாழ்ப்பாண ரவுடிகளின் கூட்டத்திற்கு படைத்தரப்பால் வழங்கப்படும் வாள்ப் பயிற்சி, கத்தி, பொல்லுகள் போன்றவற்றைப் பாவிக்கும் ஆயுதப்பயிற்சி   என ஊடகங்களில வந்த செய்தி

இவன் சன்னா எனப்படும் பிரசன்னா. இவன் கடந்த வருட இறுதிவரை யாழ் கோப்பாய் வடக்குப் பகுதியில் தங்கியிருந்ததாகவும் தற்போது மலையகப்பகுதிக்கு சென்று விட்டதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவன் தொடர்பாக பொலிசாருக்கு அனைத்து தகவல்களும் தெரிந்து பொலிசார் வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் யானையைத் தேடுவது போல் தேடிக் கொண்டு இருப்பதுதான் சிரிப்பை வரவழைக்கின்றது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிசாரால் மும்முரமாகத் தேடப்பட்டுவரும் தேவா படையினரின் முகாமில் சுதந்திரமாக திரியும் காட்சிகள் என இவனது பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனுப்பிய புடைப்படம் இது

பொலிசாரால் மும்முரமாகத் தேடப்பட்டுவரும் தேவா படையினரின் முகாமில் சுதந்திரமாக திரியும் காட்சிகள் என இவனது பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனுப்பிய புடைப்படம் இது

இதே வேளை இக் காவலிகள் தொடர்பாக உயர் படை அதிகாரிகளுடன் நாம் தொடர்பு கொண்டு  கேட்ட போது நல்லிணக்க அரசு பதவியேற்ற பின்னர் இவ்வாறான எந்தவெரு காவாலிகளுடனும் படையினர் தொடர்புகளைப் பேணவில்லை எனவும் அவ்வாறு யாராவது காவலிகள் படையினரின் பெயரைக் கூறி அட்டகாசங்கள் செய்தால் அது தொடர்பாக உடனடியான பொலிசாரிடமும் தங்களிடமும் தெரிவிக்கும்படி படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.