த்ரிஷா இல்லைனா பிந்து மாதவி: தொழிலதிபர் அதிரடி

த்ரிஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட தொழிலதிபர் வருண் மணியன் தற்போது த்ரிஷா இல்லைனா பிந்து மாதவி என்று தற்போது பிந்து மாதவியோடு பிஸியாக உள்ளார்.

தொழிலதிபர் வருண் மணியனுடன் த்ரிஷா நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட பின் அவரது கல்யாணம் குறித்த செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. இறுதியில் வருண் மணியன் சில கண்டிஷன்கள் போட்டதாகவும், அதனால் நான் விலகி விட்டேன் என்றும் த்ரிஷா கூறினார்.

தற்போது வருண் மணியன் கண்டிஷன்களுக்கு ஏற்ப ஒருவர் அவருக்கு சிக்கி விட்டார். த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படம் வசனம் போல த்ரிஷா இல்லாத நிலையில் பிந்து மாதவியை பிடித்துள்ளார். பிந்து மாதவி பிஸியாக இல்லாத நிலையில் வருண் மணியனுக்கு ஏற்றவாராக உள்ளார்.

பிந்து மாதவி, வருண் மணியனுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதவிட்டுள்ளார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை உடனே அதை நீக்கிவிட்டார்.