தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை

தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை

யாழ்ப்பாணம், பலாலி உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பொங்கல் விழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வார் என இறுதிவரை எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே ஜனாதிபதி இதில் கலந்துகொள்ளவில்லையெனவும் அதனையிட்டு அவர் கவலை தெரிவித்ததாகவும் தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இனிதே நடைபெற்றன.

தேசிய பொங்கல் விழாவையொட்டி, பாதுகாப்புக்கள் பலப்படுத்தபட்டு யாழ்ப்பாணத்தின் வீதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை

தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை