வடக்கு காணாதென்று கிழக்கிலும் படம் காட்டிய அனந்தி

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள பின் தங்கிய கிராமங்களை முன்னேற்றி விட்டார் போல் இருக்கின்றது?

இப்போது வட மாகாணத்தில் இவர் முன்னேற்றுவதற்கு எந்தவொரு இடமும் இல்லாத காரணத்தால் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய கிராமம் ஒன்றுக்கு சென்று இருக்கின்றார் போலும்?

சவளக்கடையில் உள்ள சது/ கணேஷா வித்தியாலயத்துக்கு சென்று 85 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், புத்தகப் பைகளும் வழங்கி வைத்தார்.

ஆனால் இவற்றை இவரின் சொந்த நிதியில் வாங்கி கொடுத்து இருந்தார் என்று நீங்கள் நினைத்தால் தவறாகும்.

ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து இருந்தது.