பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி போட்ட வாலிபர்

திருமணமான பெண்ணை அடைவதற்காக, அவரின் கணவரை வாலிபர் ஒருவர் மர்ம ஊசி செலுத்தி கொலை செய்த விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி முடிந்து விட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரை ஒரு வாலிபர் தாக்கியுள்ளார். மேலும், மறைத்து வைத்திருந்த விஷ ஊஷியை அவர் மீது செலுத்தியுள்ளார்.

இருப்பினும், அந்த மர்ம நபரை ஒரு கையில் பிடித்தவாறு, ரவி சத்தம் போட்டு அருகிலிருந்தவர்களின் உதவிக்கு அழைத்துள்ளார். ரவியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்த பார்த்தனர். அப்போது அவர் வலியினால் துடித்துக்கொண்டிருந்தார். எனவே, இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு உடனடியாக புகார் கொடுத்தனர். 

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ரவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அதற்குள் அந்த நபர் செலுத்திய விஷம் அவரது உடல் முழுவதும் பரவி அவர் மரணமடைந்தார்.

விசாரணையில், ரவியின் மனைவியை அடைய நினைத்த அந்த வாலிபர், அதற்கு இடையூறாக இருந்த ரவியை இப்படி விஷ ஊசி செலுத்தி கொல்ல முடிவெடுத்தது தெரியவந்தது. அந்த வாலிபர் ஒரு பிசியோதரபி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.