கேரளா கஞ்சாவுடன் நெடுந்தீவில் இந்திய கடத்தல்காரர்கள் கைது

இந்தியாவில் இருந்து கடல் வழியாக மீன்பிடி படகில் கடத்தப்பட்ட 53 கிலோ கேரளா கஞ்சா கடற்படையினரால் நேற்று நெடுந்தீவில் கைப்பற்றப்பட்டது.

கடத்தல் பேர்வழிகளான இந்தியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர்.