பிரபாகரனின் பரம்பரை கோவிலில் திருவாதிரை உற்சவம் வெகுபிரமாதம்

புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பரம்பரை கோவிலான வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா அல்லது ஆருத்திரா தரிசனம் வெகுசிறப்பாக நேற்று இடம்பெற்றது.

தமிழகத்திலும், ஈழத்திலும் உள்ள சிவன் ஆலயங்களில் இது முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக இடம்பெறுவது வழக்கம்.

கடந்த வருடம் வல்வெட்டித்துறை கோவிலில் இடம்பெற்ற நடராஜ பெருமான் வீதியுலா, நடராஜ பெருமான் திருக்கூத்து ஆகியவற்றையே காணொளியில் காண்கின்றீர்கள்.